Advertisment

கமல் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

sai pallavi joins sivakarthikeyan kamalhaasan movie

சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்'படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்'படத்திலும்நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களில்டான் படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அயலான் படம் இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்குஇயக்குநர்அனுதீப் இயக்கும் 'எஸ்கே 20' படத்தில் நடித்த வருகிறார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில்சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தைரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இது குறித்தஅதிகாரபூர்வஅறிவிப்பு எற்கனவேவெளியான நிலையில் தற்போது படத்தின் கதாநாயகி குறித்தஅறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி தமிழில் 'மாரி 2' என்.ஜி.கே ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN actor sivakarthikeyan kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe