dhanush

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முல்லா, நடிகர் தனுஷை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளார். சமீபத்தில் இது குறித்தான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்கும் யோசனையில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சாய் பல்லவி, பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் வணிக ரீதியில் பெரிய வெற்றியை ஈட்டாத நிலையிலும், தனுஷ் - சாய் பல்லவி ஜோடி ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. அரசியல் கலந்த திரில்லர் கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை இந்தாண்டு இறுதியில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

சேகர் கம்முல்லா இயக்கத்தில் வெளியான 'ஃபிடா' மற்றும் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் ஸ்டோரி' ஆகிய படங்களில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment