Sai Pallavi has advised his sister Pooja Kannan

Advertisment

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இயக்குநர்ஏ.எல். விஜய் கதை எழுதியிருக்கும் இப்படத்தில் நடிகை ரீமா கலிங்கல், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன்ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d2cd0e77-0a1a-412b-b6ea-1e67fd756fd6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_52.jpg" />

'சித்திரைச் செவ்வானம்', பூஜா கண்ணன் நடிக்கும் முதல் படம் என்பதால் அவரின் அக்கா சாய் பல்லவி வாழ்த்துகளுடன், அறிவுரையும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் மகிழ்ச்சியைவிட படத்தைப் பார்த்து பார்வையாளர்கள் பொழியும் அன்பும் போதை தரும். அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு சூழலிலும் உன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன், எப்போதும் பாதுகாப்பேன்” எனக்குறிப்பிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.