Advertisment

சர்வதேச திரைப்பட விழாவில் சாய் பல்லவி படம்

sai pallavi gargi movie in 44th moscow international film festival

Advertisment

சாய் பல்லவி நடிப்பில் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'கார்கி'. தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தை சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தமிழில் வெளியிட்டது. சமூகத்துக்கு தேவையான ஒரு அழுத்தமான கதையை சொல்லியிருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் 'கார்கி' படம், 44-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. அந்த விழா ரஷ்யாவில் கடந்த ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்றது. இதில் ‘உலகம் முழுவதும் பிளாக் பஸ்டர் ஹிட்' என்ற பிரிவின் கீழ் ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த விழாவில் அல்லு அர்ஜுனனின் 'புஷ்பா' படமும் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

gargi movie sai pallavi
இதையும் படியுங்கள்
Subscribe