தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளசினிமாக்களில்நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில்ராணாவுடன்இணைந்துவிரத பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவிநக்சலைட்டாகநடித்துள்ள இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தின்ரிலீஸுக்குமுன்பு சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர்ஃபைல்ஸ்திரைப்படத்தில் காஷ்மீர்பண்டிட்டுகள்கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர்பண்டிட்டுகள்கொல்லப்படுவதும்,கரோனாகாலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களைஜெய்ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்"என்று கூறியுள்ளார். இவரின் இந்தகருத்துக்குப்பலரும் ஆதரவு தெரிவித்தாலும்இந்து அமைப்பினர் மற்றும் நடிகை விஜய் சாந்தி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இது குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதல் முறையாக இது போன்றுவீடியோ வெளியிட்டு பேசுகிறேன். சமீபத்தில் நான் அளித்த போட்டி சர்ச்சையாக்கப்பட்டது.என்னைப் பொறுத்தவரைஅனைவரும் ஒன்றுதான் அதைத்தான்நான் அந்த பேட்டியில் சொன்னேன். ஒரு மருத்துவ பட்டதாரியாக எந்த ஒரு உயிரையும் சாதி, மதம், மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது. என்னுடைய 14 வருட பள்ளி வாழ்க்கையில் இந்தியர்கள் அனைவரும் சமம். அவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று உறுதிமொழி எடுத்துள்ளேன். அது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. சிறுவயதில் சாதி, மதம் என பிரித்து பார்த்ததில்லை. எப்போதும் நடுநிலையாக இருந்திருக்கிறோம். எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.சிலர் அந்த முழு பேட்டியை கேட்காமல் ஒரு சிறு பகுதியை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் யாரும் நான் சொல்லியதின் உண்மைத்தன்மையை ஆராயவில்லை.இனி என் இதயத்தில் உள்ளதை பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பேன். வன்முறை எந்த வடிவத்திலும் தவறு ,எந்த மதத்தில் பெயரால் நடக்கும் வன்முறையும் பெரும் பாவம் என்றும் நம்புகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” கூறியுள்ளார்.