Advertisment

கேஜிஎஃப் ஹீரோவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி

sai pallavi to act with yash next movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படம் வெளியாகி 1 வருடத்துக்கு மேல் ஆகியும் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார் யஷ். சமீபத்தில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட்டில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.

Advertisment

மேலும் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இதையடுத்து கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளாதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் கதாநாயகியாகவும் நாக சைதன்யாவின் 23வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

sai pallavi yash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe