sai pallavi act sister role mahesh babu starring next movie

Advertisment

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் 'சர்க்காரு வரி பாட்ட' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் ராஜமௌலி இயக்கத்தில்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து மகேஷ் பாபுவின் 'சர்க்காருவரி பாட்ட'படத்தின்ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால்கரோனாமூன்றாவது அலை காரணமாக 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரிலீஸும்மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

நடிகர் மகேஷ் பாபு இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாகதிரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயங்கும் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.இப்படத்தில் மகேஷ் பாபுவுக்குத் தங்கையாக நடிக்க பிரபல நடிகைகளிடம்பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இறுதியாக நடிகை சாய் பல்லவி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. முதலில் தங்கையாக நடிக்க சாய்பல்லவிதயக்கம் காட்டிய நிலையில் பிறகு த்ரிவிக்ரம் படம் என்பதால் ஒப்புக்கொண்டதாகசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.