sai pallavi

Advertisment

மலையாளத்தில் இந்தாண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியான படம் 'அய்யப்பனும் கோஷியும்'. போலீஸ் அதிகாரியான அய்யப்பனுக்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கோஷிக்கும் இடையே யார் பெரியவன் என நடக்கும் மோதலே இப்படத்தின் கரு. அய்யப்பனாக பிஜு மேனனும், கோஷியாக பிருத்வி ராஜும் நடிப்பில் மிரட்டியிருந்தனர்.

மலையாளத்தை தாண்டி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த 'அய்யப்பனும் கோஷியும்' படம் தமிழ், தெலுங்குஉள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண், போலீஸ் அதிகாரி அய்யப்பனாக நடிக்கிறார்.

இந்தநிலையில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர், மலையாள படத்தில் அய்யப்பனின் மனைவியாக வரும் கண்ணம்மா என்ற பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், மேலும், இப்படத்தில் அய்யப்பனோடு மோதும் கோஷி கதாபாத்திரத்தில், நடிகர் நிதின் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பீஷ்மா என்ற வெற்றி படத்தில் நடித்திருந்த நிதின், பவன் கல்யாணின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.