Advertisment

“அதிலிருந்து தப்பிக்க மீடூ இயக்கம்தான் உதவியது”- சாய் பல்லவி

sai pallavi

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, அதன்பின் மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலராக அறிமுகமாகி பலரைக் கவர்ந்த சாய் பல்லவி. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழிலும் சூர்யாவுடன் நடித்துள்ளவர் தற்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ள பாவக் கதை அந்தாலஜியில் வெற்றிமாறன் இயக்கியுள்ள பகுதியில் நடித்துள்ளார்.

Advertisment

அண்மையில் இதுதொடர்பாக பலருக்குப் பேட்டியளித்து வருகிறார். அப்போது மீடூ இயக்கம் ஒருமுறை அவரை காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார். அதில், “ஒரு படத்தின் இயக்குனர் முத்தக் காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் அப்படி நடிக்க முடியாது என்று மறுத்தேன். ஆனாலும் தொடர்ந்து முத்தக்காட்சியில் நடிக்குமாறு நிர்ப்பந்தம் கொடுத்தார்.

Advertisment

உடனே அந்த படத்தின் கதாநாயகன் இயக்குனரைப் பார்த்து இந்த பிரச்சனையை மீ டூ இயக்கத்துக்குக் கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு இயக்குனர் முத்தக் காட்சியில் நடிக்கும்படி என்னைக் கேட்கவில்லை. மீ டூ என்னைத் தப்பிக்க வைத்தது” என்று கூறியுள்ளார்.

me too sai pallavi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe