/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/180_27.jpg)
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே டெல்லியில் இராணுவ வீரர்களுக்காக படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சாய் பல்லவி கலந்து கொண்டு படம் குறித்து நிறைய விஷயங்கள் பேசினர். அப்போது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மணிரத்னம் குறித்து பேசுகையில், “சினிமாவுக்குள் வருவதற்கு முன்னாடி டைரக்டர்ஸ் பெயர் பெரிதளவு எனக்கு தெரியாது. ஆனால் ஒரே ஒருத்தர் பெயர் மட்டும் தெரியும். அது மணிரத்னம். அவருடைய படத்தை பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அவர் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் என்னை ரொம்பவே பாதித்தது. அப்போது எனக்கு பத்து வயது. அந்த சின்ன வயதில் ஒரு சினிமா பற்றி ஒரு புது பார்வையை எனக்குள் அந்த படம் தூண்டியது. அதுக்கு பிறகு அது போன்ற சினிமாக்கள்தான் எனக்கு பிடித்தது. மணிரத்னம் படம் பார்த்து வளர்ந்ததால்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறேன். நான் சினிமாவில் இருக்கும் வரை அவருடன் ஒரு படமாவது பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)