Advertisment

sai dharam tej

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனும் தெலுங்கு திரையுலகின் இளம் நடிகருமான சாய் தரம் தேஜ், ‘ரே’, ‘சுப்பிரமணியம் ஃபார் சேல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பைக் பிரியரான இவர், தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கில் நேற்று (10.09.2021) இரவு ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக சாய் தரம் தேஜ்ஜின் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் சறுக்கி விபத்திற்குள்ளானது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சாய் தரம் தேஜ்ஜிற்கு, மார்பு மற்றும் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து, அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சாய் தரம் தேஜ்ஜிற்கு, மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துவருகின்றனர். சாய் தரம் தேஜ்ஜின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் பவன் கல்யாண், சிரஞ்சீவி, அல்லு அரவிந்த் உள்ளிட்ட தெலுங்கு திரைப்பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சாய் தரம் தேஜ்ஜின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துவருகின்றனர்.