மலையாள நடிகர் ஷேன் நிகம், ப்ரீதி நடித்திருக்கும் படம் ‘பல்டி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கியிருக்க சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் மூலம் மலையாளத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

Advertisment

பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். அப்போது சாய் அபயங்கரிடம், உங்களுக்கும் அனிருத்துக்கும் போட்டியா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், “அவர்லாம் நிறைய பன்னிட்டாரு. நான் இப்ப தான் ஆரம்பிச்சிருக்கேன். உங்களுடைய ஆசீர்வாதத்தால இன்னும் நல்லா ஒர்க் பன்னனுமே தவிர போட்டிலாம் இல்ல” என்றவர் அந்த இடத்திற்கு போக இன்னும் நிறைய இருக்கு என பதிலளித்தார். 

பின்பு அவரிடம் இப்போதைய இசையமைப்பாளர்களுக்கு ஏற்படும் ட்ரெண்டிங் பிரஷர் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் ட்விட்டர், இன்ஸ்டாகிராம்ல இல்ல. அதனால எனக்கு அந்த பிரஷர் இல்ல. ஆனா விமர்சனங்களை ஏத்துக்கிட்டு அதுல கொடுக்கும் சில சஜெசன்களை கேட்டு நல்லா ஒர்க் பன்னனும்னு ஆசைப்படுறேன். அதே சமயம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ரெண்டும் நம்ம நேரத்தை ரொம்ப சாப்புடுது. நான் ஒரு கீ-பேட் போன் தான் ஸ்டூடியோவில் யூஸ் பன்றேன். அதை வச்சு தான் எல்லார்க்கிட்டையும் பேசுறேன்” என்றார்.