Advertisment

நடிகர் விஜயகாந்த்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு பாராட்டு விழா சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றது. இதில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் அப்போது தன் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டனில் இருந்தார். இருப்பினும் தன் தந்தைக்கு மரியாதை செய்யும் விதமாக தன் இடது கையில் தன் தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய வீடியோவை வெளியிட்டு விஜயகாந்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் சண்முகபாண்டியன் தற்போது லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவர் பச்சை குத்திய இரு கண்களை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து கூறி ஆசி பெற்றார். அப்படி இவர்கள் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் விஜயகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூடவே.... " #தமிழன்என்றுசொல் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற எனது இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார். தன் கையில் எனது கண்களை பச்சைகுத்தியதை (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் " என்று பதிவிட்டு மகிழ்ந்தார்.