sadha

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

நடிகை சதா மற்றும் பிக்பாஸ்2 புகழ் ரித்விகா ஆகியோர் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் 'டார்ச் லைட்' படம் பற்றி இயக்குநர் மஜீத் பேசும்போது.... "இது ஒரு பீரியட் பிலிம் . 1990களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது . இது நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை . இப்படத்தின் கதையை கேட்ட நடிகைகள் பலரும் நடிக்க தயங்கினார்கள். ஆனால் நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்த சமூகம் எப்படி படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்த கதை சார்ந்து பலர் உண்மை சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து படமாக்கினேன். மும்பையில் சென்சார் ஆபிஸர்கள் படம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன் படம் சிறப்பாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். படத்தில் சதா,ரித்விகா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மேலும் படத்தில் புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இங்கு இருக்கும் சென்சார் அலுவலகத்திற்கு சென்றபோது இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். இங்குப்போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் பிறகு நான் மும்பை சென்று 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ளேன்" என்றார். 'டார்ச் லைட்' படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">