sadha emotional speech abou his hotel

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகை சதா. பின்பு விக்ரமின் 'அந்நியன்', அஜித்தின் 'திருப்பதி', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்பு தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த சதா கடைசியாக 2018 இல் வெளியான 'டார்ச்லைட்' படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு மும்பையில் 'எர்த்லிங்ஸ் கபே' என்ற பெயரில் ஒரு ஹோட்டலை தொடங்கினார். பின்பு அதிலே தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்தார்.

Advertisment

இந்நிலையில் அந்த ஹோட்டலை திடீரென்று இடத்தின் உரிமையாளர் காலி செய்ய சொல்லியுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "23 ஏப்ரல் 2019 அன்று இந்த ஹோட்டலை திறந்தோம். மிகவும் காதலித்து நடத்தி வந்தேன். தினமும் 12 மணி நேரம் அந்த ஹோட்டலிலே செலவழித்தேன். கடந்த ஏப்ரல் 23 அன்று அந்த இடஉரிமையாளர் ஃபோன் செய்து இடத்தை காலி செய்ய சொல்லி கேட்டார். நான் எவ்வளவோ முயற்சித்தேன். அவர் மனம் மாறும் படி தெரியவில்லை. வாடகையும்சரியாக கட்டி வந்தேன். ஆனால் இட உரிமையாளர் சொல்லிவிட்டதால் இம்மாத இறுதியில் காலி செய்யவுள்ளேன். இதனால் கடந்த ஒரு வாரமாக அழுது கொண்டிருக்கிறேன்" என அழுதபடி பேசினார்.

மேலும் எமோஷனலாக ஹோட்டலை பற்றி பல நினைவுகளை பகிர்ந்தசதா, தனது வழக்கமான வாடிக்கையாளர்களை இந்த மாதத்திற்குள் தங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisment