Advertisment

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெப் சீரீஸின் ட்ரைலர் வெளியானது...

உலகம் முழுவதும் இணையவாசிகளை தன் பக்கம் ஈர்த்திருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்தியாவிலும் காலூன்ற அனுராக் காஷ்யப் இயக்கத்தில் செக்ரட் கேம்ஸ் என்று ஒரு இணைய தொடரை உருவாக்கியது. இந்த தொடரில் சயிஃப் அலிகான், நவாசுதின் சித்திக், பங்கஜ் திருப்பதி, ராதிகா ஆப்தே என்று பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

Advertisment

nawazuddin

கடந்த வருடம் ஜூலை 6ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான இந்த தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் உருவாகினார்கள். வருண் சந்திரா எழுதிய செக்ரட் கேம்ஸ் என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு செமையான ரெஸ்பான்ஸ் கிடைக்க, ரசிகர்கள் அனைவரும் அடுத்த சீஸனிற்காக காத்திருந்தார்கள்.

Advertisment

இதனையடுத்து இந்த குழுவில் பல பிரச்சனைகள் ஏற்பட, அடுத்த தொடர் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்பட்டது. ஆனாலும், அப்போ அப்போ இந்த தொடர் குறித்தான அறிவிப்பை வெளியிட்டது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் இரண்டாவது சீஸனின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ். அது மட்டுமல்லாமல் வருகிற ஆக்ஸ்ட் 15ஆம் தேதி தொடர் இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/w-Xe8gLBc5I.jpg?itok=ZspJ1vg4","video_url":" Video (Responsive, autoplaying)."]}

anurag kashyap nawazuddin siddique sacred games season 2
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe