Advertisment

சினிமாவில் களமிறங்கும் சச்சினின் மகள்! 

sachin tendulkar daughter sara debut bollywood cinema

Advertisment

பொதுவாக பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் கால் பதிப்பது வழக்கம். அந்த வகையில்தற்போது கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்சச்சின் டெண்டுல்கரின்மகள் சாரா டெண்டுல்கர் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்குஅர்ஜுன் டெண்டுல்கர் என்ற மகனும், சாரா டெண்டுல்கர் என்ற மகளும் உள்ளனர். மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு தந்தையைபோலவே கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் காரணமாக அவர் ஆல்ரவுண்டராக விளையாடிவருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா டெண்டுல்கருக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளதாககூறப்படுகிறது. இதற்கு அவரது தந்தையும் ஓகே சொல்லிவிட்டதாககூறப்படுகிறது. மேலும், இதற்காக சாரா டெண்டுல்கர் நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் நடிப்பது உறுதியாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

Bollywood Sachin Tendulkar
இதையும் படியுங்கள்
Subscribe