சித்தார்த் நடிப்பில்  '8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் கடந்த ஜூலை 4ஆம் தேதி வெளியான படம் ‘3 பிஹெச்கே’(3 BHK). இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார். 

Advertisment

நடுத்தர குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை பற்றி இப்படம் பேசியிருந்தது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும் இப்படம் ஸ்ட்ரீமாகிவருகிறது. இப்படத்திற்கு சிம்பு உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்தாலும் ஓடிடிக்கு பிறகு சில ட்ரோல்களையும் இப்படம் சந்தித்தது. 

477

இந்த நிலையில் இப்படத்திற்கு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ரெடிட் சமூக வலைத்தளப் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அதில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், உங்களுக்கு பிடித்த படங்கள் பற்றி கூறுங்கள் என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, “சமீபத்தில் 3 பிஹெச்கே படம் பார்த்து ரசித்தேன்” எனப் பதிலளித்துள்ளார். மேலும் மராத்தி படமான ‘அட தம்பாய்ச்சா நாய்’(Ata Thambyacha Naay) படமும் தனக்கு பிடித்திருந்ததாக கூறியுள்ளார். 

Advertisment

இது தொடர்பாக சச்சினுக்கு தனது எக்ஸ் பக்கம் வாயிலாக நன்றி கூறிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ், “ரொம்ப நன்றி சச்சின் சார். நீங்கள் தான் எனது குழந்தைப் பருவ ஹீரோ. இந்த பாராட்டு எங்கள் படக்குழுவினருக்கு மிகப் பெரிய ஒன்று” என சச்சினை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.