விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறாரா சச்சின்?

பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பையோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்கள் நீண்டு கொண்டே இருக்கிறது.

sachin tendulkar

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தன் பயோபிக் உருவாகவுள்ளது தொடர்பாக முத்தையா முரளிதரன், “விஜய் சேதுபதி போன்ற ஒரு திறமையான நடிகர் என் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும்” என்றார்.

கிரிக்கெட் மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் கிரிக்கெட்டின் கடவுள் என்றும் கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படுகிற சச்சின் டெண்டுல்கரும், முத்தையா முரளிதரனும் நல்ல நண்பர்கள். முரளிதரனின் இந்த பயோபிக்கிலும் அவர் ஒரு சில காட்சிகளில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sachin Tendulkar Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe