கடந்த வருடத்திற்கான அதிக சம்பளம் பெற்றுள்ள நடிகர் பட்டியலை அண்மையில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் wwe மல்யுத்த வீரராக உலகப் புகழ்பெற்ற தி ராக் என்று அழைக்கப்படும் டுவேன் ஜான்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளார். அவர் 600 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து கிறிஸ் ஹெர்ம்ஸ்வொர்த், ராபர்ட் டவுனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒரே ஒரு இந்திய நடிகரான அக்‌ஷய் குமார் இடம் பிடித்துள்ளார்.

Advertisment

scarlette johanSon

இந்நிலையில் போர்ப்ஸ் நிறுவனம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்கார்லட் ஜொஹன்ஸன். இவர் பிளாக் வீடோவ் படத்தில் நடிப்பதற்காக சுமார் 54 மில்லியன் டாலர் பெற்றுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய். இரண்டாம் இடத்தை சோபியா வெர்ஜேரா ரூ. 315 கோடி சம்பளம் வாங்கி பிடித்துள்ளார். ரீஸ் வித்தர்ஸ்பூன் - ரூ. 250 கோடி, நிகோல் கிட்மேன் - ரூ. 243 கோடி, ஜென்னிபர் அனிஸ்டன் - ரூ. 200 கோடி.

இந்தியளவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளான தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.