நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அண்மையில் கட்சி ஒன்றை தொடங்க அரசு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர்.
பதிவு செய்யப்பட்ட அந்தக்கட்சியின் பெயர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆகும். தகவல் வெளியாகவுடனேயே, விஜய் தரப்பிலிருந்து அவருக்கும் அந்த கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எஸ்.ஏ.சி., அந்த கட்சிக்கு பத்மநாபன் என்கிற ஆர்.கே. ராஜா என்பவரை தலைவராக நியமித்திருந்தார். அவரும் இரண்டு நாட்களில் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனிடையே பத்மநாபன் மீது நில மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்த ராஜாவை திருச்சி மத்திய குற்றப்பரிவு போலீஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.