Selvaraghavan

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது, நடிகராக செல்வராகவனின் அறிமுகப் படமாகும். இதில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாக பாதியில் தடைப்பட்டது. பின், நிலைமை சீரானதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிய படக்குழு, கடந்த வாரம் படப்பிடிப்பை நிறைவு செய்தது.

Advertisment

தற்போது ‘சாணிக் காயிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சாணிக் காயிதம்’ திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனம் இப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment