Advertisment

செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

Saani Kaayidham

Advertisment

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இது, நடிகராக செல்வராகவனுக்கு அறிமுகப்படமாகும்.இப்படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

இந்த நிலையில், சாணிக்காயிதம் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

selvaraghavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe