
சாமி படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த போஸ்டர் வீடியோவின் முடிவில் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மே 26 (இன்று) என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் நேற்று டிரைலர் வெளியிட்டு தேதியை மாற்றி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். மேலும் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.