Skip to main content

சாமி 2 படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
saamy

 

 

 

விக்ரம் - ஹரி கூட்டணியில் வெளியான 'சாமி' பிளாக் பஸ்டர் ஹிட்டானதையடுத்து இதன் தொடர்ச்சியாக 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படம் தற்போது இதே கூட்டணியில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 'சாமி ஸ்கொயர்' படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாமி ஸ்கொயர் படத்தின் வீடியோ பாடல் !

Next Story

தமிழக காவல்துறைக்காக விக்ரம் நடித்த குறும்படம்!

Published on 17/09/2018 | Edited on 18/09/2018
vikram

 

 

 

'சாமி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி 2ஆம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் விக்ரம் தற்போது ராஜேஷ் எம் செல்வா இயக்கும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது ஒரு விளம்பர படத்திலும்  நடித்துவுள்ளார். சி.சி.டிவி கேமராவின் விழிப்புணர்வு சம்மந்தமாக தயாரான இந்த விளம்பர படத்திற்கு 'மூன்றாம் கண்' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் ஏற்கனவே ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவான உல்லாசம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.