Published on 08/09/2018 | Edited on 08/09/2018

விக்ரம் - ஹரி கூட்டணியில் வெளியான 'சாமி' பிளாக் பஸ்டர் ஹிட்டானதையடுத்து இதன் தொடர்ச்சியாக 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படம் தற்போது இதே கூட்டணியில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 'சாமி ஸ்கொயர்' படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.