இணையத்தை கலக்கும் விக்ரமின் சாமி 2... ரசிகர்கள் ஆரவாரம் 

irumbu thirai.jpeg

vikram

'சாமி' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி தற்போது 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படத்தை இயக்கி வருகிறார். மீண்டும் விக்ரம் நடிப்பிலேயே உருவாகும் இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து தற்போது கடைசிகட்ட படப்படிப்பு காரைக்கடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் முன்னர் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும் இப்படத்தின் டிரைலரை வரும் மே 26ஆம் தேதி வெளியிடுவதாகவும் இந்த வீடியோவில் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்படம் வரும் அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

hari saamysquare vikram
இதையும் படியுங்கள்
Subscribe