/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/irumbu thirai_1.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Dc_kknIUwAA84TL.jpg)
விக்ரம் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படத்தை இயக்குனர் ஹரி முழு வீச்சில் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காரைக்கடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹாவும் பிரபு, ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வரும் மே 17ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளனர். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை வரும் அக்டோபரில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)