Skip to main content

தெருவை காணோம்... தேடிய சாமி டீம்!

Published on 23/03/2018 | Edited on 24/03/2018

vikram


சீயான் விக்ரம் நடித்த துருவநட்சத்திரம் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் தற்போது 'சாமி ஸ்கொயர்' படத்தில் நடித்து வருகிறார். 2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'சாமி' படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நெல்லை நகரத்தில் உள்ள தெருவில் மீண்டும் சாமி 2 படத்துக்காக பாடல் மற்றும் சண்டை காட்சி எடுக்க முடிவு செய்யப்பட்டது.  ஆனால் அந்த தெரு தற்போது 15 ஆண்டுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல் பல மாற்றங்களுடன் உள்ளது. எனவே நெல்லை புறநகர் பகுதியில் சாமி முதல் பாகத்தில் இடம் பெற்ற தெருவை போலவே விரைவில் செட் அமைத்து பாடல் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சாமி 2 (படங்கள்)

Next Story

விக்ரம் பட விழாவில் அன்புச்செழியன்!  

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
saamy

 

 

 

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ.ஏ.கே.சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா, இவர்களுடன் இயக்குநர் ஹரி, நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் அந்த விழாவில் ஃபைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டார். சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமாரின் மரணத்திற்கு காரணமாக சொல்லப்பட்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் அந்த வழக்கில் தேடப்பட்ட பொழுதே முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல விழாவில் கலந்துகொண்டு ஷாக் கொடுத்தார். 

 

 

 

முதல்வருடன் தனியறையில் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. அதன்பின் நீண்ட நாட்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்த பைனான்சியர் அன்புச்செழியன் இவ்விழாவில் கலந்துகொண்டது வந்திருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அசோக்குமார் மரணத்தின் போது இவரை எதிர்த்து விஷால், ஞானவேல்ராஜா, இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். அதே நேரம் இவருக்கு ஆதரவாகவும் சுந்தர்.சி, விஜய் ஆண்டனி போன்றோரின் குரலும் எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற அன்புச்செழியன், இன்னும் வழக்கிலிருந்து வெளிவரவில்லை. ஆனாலும் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் 90% படங்களுக்கு இவர்தான் பைனான்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. கந்துவட்டி என்ற மிக மோசமான பிரச்சனையில் ஒரு மரணத்துக்குக் காரணமாக சொல்லப்படும் ஒருவர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லாதது வியப்பளிக்கிறது.