Skip to main content

சமரசமும் செய்ய விரும்பாததால் ரிலீஸை தேதியை தள்ளி வைத்த 'பாகுபலி' பிரபாஸ் படம்..!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019
saaho

 

 

 

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் 'சாஹோ' படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில் இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்....''நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார். பிரபாஸ் ஜோடியாக ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளசர்மா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல இயக்குனருக்கு நிச்சயதார்த்தம்!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

sujith


'ரன் ராஜா ரன்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுஜித். இந்தப் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமே மிகப்பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கினார். 'சாஹோ' என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியானது. 
 


கலவனையான விமர்சனங்களைப் பெற்று வந்த 'சாஹோ' படத்தைத் தொடர்ந்து 'லுசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிரஞ்சீவி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

இதனிடையே, நேற்று 'சாஹோ' இயக்குனருக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பல் மருத்துவரான பரவாலிகாவை திருமணம் செய்யவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
 

 

Next Story

எனக்கு கோவில் கட்டுவதாக ரசிகர்கள் சொன்னார்கள்- சாஹோ இயக்குனர் சிலிர்ப்பு!!!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

'பாகுபலி 2' என்ற மிகப்பெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாஹோ'. இருந்தாலும் படம் பார்த்தவர்களிடையே இது கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இப்படம் ரூ. 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.மேலும் படத்தில் ஒவ்வொரு சீன், மைய கதை என்று அனைத்தும் திருட்டுதான் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
 

sujeeth

 

 

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜெரோம் சல்லி என்ற பிரஞ்சு திரைப்பட இயக்குனர், எனக்கு இந்திய சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறதுபோல என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அவருடைய ரசிகர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதிஜெரோம் சல்லி என்ற பிரஞ்சு திரைப்பட இயக்குனர் தனது ட்விட்டரில், “எனது லார்கோ வின்ச் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது படமும் முந்தைய படத்தைப் போலவே மோசமாக இருப்பது போல தெரிகிறது. எனவே தெலுங்கு இயக்குனர்களே என் கதையை திருடினால் தயவுசெய்து ஒழுங்காக திருடுங்கள். என்னுடைய “இந்தியாவில் எதிர்காலம்” ட்வீட் முரண்பாடாக இருந்ததால் மன்னிக்கவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

ஜெரோம் சல்லி இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் லார்கோ வின்ச். திரிவிக்ரம் இயக்கத்தில் பவண் கல்யாண் நடிப்பில் வெளியான அங்ஞாதவாசி படத்தையும் இவர் என்னுடைய லார்கோ வின்ச் படத்தின் கதைதான் என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தின் மீது வரும் விமர்சனங்கள் குறித்து இயக்குனர் சுஜீத் பேசியுள்ளார். அதில், “‘சாஹோ’ படத்தைக் காப்பி என்று சொல்பவர்கள் இன்னும் 'லார்கோ வின்ச்' படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு 'சாஹோ' படம் புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்குப் புரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எழுதக் கூடாது. படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிஹாரிலிருந்து பலர் எனக்குத் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நீங்கள் பிஹாரில் பிறந்திருந்தால் உங்களுக்கு கோயில் கட்டியிருப்போம் என்று கூட சிலர் கூறினார்கள்” என்றார்.