பாகுபலி 2 படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் சாஹோ என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக ஷூட்டிங் பணிகளில் இருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் இப்படத்தின் டீஸர் நான்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 மில்லியன்களுக்கும் மேல் பார்வையாளர்கள் இந்த டீஸரை சமூக வலைதளத்தில் பார்த்துள்ளது சாதனையாகியுள்ளது.

sahoo

Advertisment

Advertisment

இளம் இயக்குநரான சுஜீத்தின் இரண்டாவது படமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதி முகேஷ், அர்ஜூன் விஜய், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நடிகர்கள் வில்லன்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நிறைய சண்டை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று படத்தின் டீஸரை பார்க்கும்போதே தெரிந்திருந்தது. அபுதாபியில் கார் சேஸிங் காட்சி ஒன்று படமெடுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 8 நிமிடங்கள்தான் படத்தில் இடம்பெறுகிறதாம். ஆனால், மொத்தமான இந்த காட்சியை எடுப்பதற்கான செலவு எவ்வளவு தெரியுமா சுமார் 70 கோடி. சமூகவலைதளத்தில் இச்செய்தி வைரலாகி வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இப்படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.