'பாகுபலி 2' என்ற மிகப்பெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாஹோ'. இருந்தாலும் படம் பார்த்தவர்களிடையே இது கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இப்படம் ரூ. 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.மேலும் படத்தில் ஒவ்வொரு சீன், மைய கதை என்று அனைத்தும் திருட்டுதான் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

sujeeth

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜெரோம் சல்லி என்ற பிரஞ்சு திரைப்பட இயக்குனர், எனக்கு இந்திய சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறதுபோல என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அவருடைய ரசிகர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

Advertisment

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதிஜெரோம் சல்லி என்ற பிரஞ்சு திரைப்பட இயக்குனர் தனது ட்விட்டரில், “எனது லார்கோ வின்ச் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது படமும் முந்தைய படத்தைப் போலவே மோசமாக இருப்பது போல தெரிகிறது. எனவே தெலுங்கு இயக்குனர்களே என் கதையை திருடினால் தயவுசெய்து ஒழுங்காக திருடுங்கள். என்னுடைய “இந்தியாவில் எதிர்காலம்” ட்வீட் முரண்பாடாக இருந்ததால் மன்னிக்கவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

ஜெரோம் சல்லி இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் லார்கோ வின்ச். திரிவிக்ரம் இயக்கத்தில் பவண் கல்யாண் நடிப்பில் வெளியான அங்ஞாதவாசி படத்தையும் இவர் என்னுடைய லார்கோ வின்ச் படத்தின் கதைதான் என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தின் மீது வரும் விமர்சனங்கள் குறித்து இயக்குனர் சுஜீத் பேசியுள்ளார். அதில், “‘சாஹோ’ படத்தைக் காப்பி என்று சொல்பவர்கள் இன்னும் 'லார்கோ வின்ச்' படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு 'சாஹோ' படம் புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்குப் புரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எழுதக் கூடாது. படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிஹாரிலிருந்து பலர் எனக்குத் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நீங்கள் பிஹாரில் பிறந்திருந்தால் உங்களுக்கு கோயில் கட்டியிருப்போம் என்று கூட சிலர் கூறினார்கள்” என்றார்.