Advertisment

பிரபல இயக்குனருக்கு நிச்சயதார்த்தம்!

sujith

'ரன்ராஜா ரன்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுஜித். இந்தப் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமே மிகப்பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கினார். 'சாஹோ' என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியானது.

Advertisment

கலவனையான விமர்சனங்களைப் பெற்று வந்த 'சாஹோ' படத்தைத் தொடர்ந்து 'லுசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிரஞ்சீவி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Advertisment

இதனிடையே, நேற்று 'சாஹோ' இயக்குனருக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பல் மருத்துவரான பரவாலிகாவை திருமணம் செய்யவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

saaho sujith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe