/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sadak-2.jpg)
மகேஷ் பாட் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு உருவான படம் 'சடக்'. இத்தனை வருடங்களுக்குபிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.
இந்தபடத்தை மகேஷ் பாட் இயக்க அவருடைய இரு மகள்களான பூஜா பாட் மற்றும் ஆலியா பாட் இருவரும் நடித்திருக்கின்றனர். மேலும் ஆதித்யராய் கபூர் உள்ளிட்ட பல்வேறு வாரிசு நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
பாலிவுட் நெபோடிஸம்தான் சுஷாந்த் மரணத்திற்குக் காரணம் எனத் ஜூன் மாதத்திலிருந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதனால் வாரிசு நடிகர்களின் படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் இப்படமும் முதன்மை வகித்தது.
இந்நிலையில் இப்படம் வருகிற 28ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. அதனை தொடர்ந்து நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தை எதிர்க்கும் விதமாக ட்ரைலருக்கு பலரும் டிஸ்லைக் கொடுத்து வருகின்றனர். ட்ரைலர் வெளியாகி 24 மணிநேரங்களே ஆன நிலையில் இப்படத்தை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் டிஸ்லைக் செய்துள்ள்னர். ட்ரைலரை லைக் செய்தவர்கள் என்று பார்த்தால் 2 லட்சத்திற்கு மேல்தான் உள்ளது. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)