நடிகர் ஜெய் தற்போது விஜய் தந்தை இயக்கத்தில் நடிக்கிறார். இது ஜெய்க்கு 25-வது படமாகும். டூரிங் டாக்கிஸ் படத்துக்குப் பின், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் தற்போதைய தலைமுறையினரின் காதலைப் பற்றி கதையமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

sac

நடிகை வைபவி, நடிகை அதுல்யா இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், 40 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 10 - 15 நாட்கள் மட்டுமே படபிடிப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisment

தொடர்ந்து பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போதுல்ல பெண்கள் எல்லாம் காதலை தைரியமாக வெளிப்படையாக சொல்கின்றனர். மேலும் ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை தெரிவிக்கின்றனர் என்றும் சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

இது பல்வேறு தரப்பினரிடையும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றது.

Advertisment