சமீபகாலமாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்ன், மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
நடிகர் விஜயகாந்த்-ஐ வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் முதன் முறையாக கால் பதித்தார். அதனை அடுத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு 'டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தில் நடித்து, தயாரித்து இயக்கினார். இதனையடுத்து 'டிராஃபிக் ராமசாமி', 'கொடி' உள்ளிட்ட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், படம் ஏதும் இயக்காமல் இருந்திருந்தார்.
தற்போது மீண்டும் இயக்குநராகத் திரும்ப பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார் எஸ்.ஏ.சி. அதில் ஜெய்யை ஹீரோவாக நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சுக்கிரன் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இப்படத்திலும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.