Advertisment

“அவர்களிடம் அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு

நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தின் பெயர் விஜய் மக்கள் இயக்கம் ஆகும். இந்த மன்றங்கள் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருக்கிறது.

Advertisment

sac

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதை இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி. சந்திரசேகர் திறந்து வைத்தார். மன்றத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சி, “மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுவதால் அரசியலை வியாபாரமாக செய்து வருபவர்கள், இனி செய்யாதீர்கள்” என்று தெரிவித்தார்.

Advertisment

“அரசியல்வாதிகள் மக்களிடம் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற எண்ணம் மாறிக்கொண்டே வருகின்றது. அதனால் அவர்களிடம் அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள்தான் வெற்றிபெற முடியும்” என்று கூறினார்.

மேலும், “கடந்த நான்கு, ஐந்து வருடமாக திரைப்படத்துறை அழிவை நோக்கி மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முதல்கொண்டு நடிகர்கள் சங்கம் வரை அனைத்திலும் தலையிடுகிறார்கள்” என்று எஸ்.ஏ.சி குற்றம்சாட்டினார்.

actor vijay sachandrasekar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe