Advertisment

கலைப்புலி எஸ். தாணு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

s thanu home and office income tax department inspection

சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இவர் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தங்கமகன், வெள்ளைக்காரத்துரை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்டபடங்களைத் தயாரித்துள்ளார். மேலும், சினிமா தயாரிப்பாளர்களுக்கு பணத்தை வழங்கி ஃபைனான்சியர் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. முக்கிய பொறுப்பில் அன்பு செழியன் இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரானகலைப்புலி எஸ் தாணு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் வெளியான படங்களில் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்தசோதனை நடைபெற்று வருவதாகசொல்லப்படுகிறது. இதே போன்றுமுன்னணி தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான வீடுகளிலும்சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment

it raid kalaipuli s thanu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe