Skip to main content

"தமிழுக்கும் விரைவில் படம் பண்ண வாங்க" - பிரபல இயக்குநருக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

S R Prabhu

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில்,  யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.  

 

அந்த சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், "கே.ஜி.எஃப் படம் வெளியான போது அந்தப் படத்தை சுற்றி நிறைய படங்கள் இருந்தன. அதையெல்லாம் தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு பெற்று அந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய ஹிட் அடித்தது என்பதை இன்றைக்கும் நிறைய பேர் ஆச்சர்யமாக பேசுகிறார்கள். பிரம்மாண்டத்தின் மீது நமக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஷங்கர், ராஜமௌலி வரிசையில் பிரசாந்த் நீல் அனைவரும் பிரம்மிக்கும் வகையிலான ஒரு படத்தை கொண்டுவந்து நிறுத்தினார். இதை எப்படி அவர் யோசித்தார் என்பதே ஆச்சர்யமாக உள்ளது. 

 

படத்தில் ஒவ்வொரு டயலாக்கும் பிரம்மாண்டமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு பிரம்மாண்டத்தை பயன்படுத்துகிறேன் என்றால் படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. படம் பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள். யாஷ் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாத்துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நடிகராக மாறியுள்ளார். பிரசாந்த் நீல் தெலுங்கில் படம் பண்ணுகிறார். தமிழிலும் அவர் விரைவில் படம் பண்ண வேண்டும்" எனப் பேசினார்.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
karthi pays tribute to vijayakanth in his memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மற்றும் மலை வளையம் வைத்து மரியாதை செய்தனர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த தினத்தன்று கார்த்தி உருக்கமுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Next Story

நட்பு டூ பரம விரோதி - கவனம் ஈர்த்த ‘சலார்’

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
salaar new trailer released

கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதில் பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர். 

இதையடுத்து இப்படத்தில் யஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இளம் பாடகி தீர்த்தா ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ஆனால் தவறுதலாக சொல்லிவிட்டதாக பின்பு சமூக வலைத்தளம் வாயிலாகத் தெரிவித்தனர். இதனிடையே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளதாக பிரித்விராஜ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். பின்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரின் கதாபாத்திரத்திற்கும் இருக்கும் நட்பை விவரிக்கும் விதமாக ஃபர்ஸ்ட் சிங்கிள் அமைந்திருந்தது. 

ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.  அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் படக்குழு கலந்து கொண்ட நிலையில், பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியும் கலந்து கொண்டார். அப்போது அவர் சலார் படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கினார். அவரிடம் அந்த டிகெட்டை படக்குழு வழங்கியது. 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரைலரில் படத்தின் கதையை சுருக்கமாக சொல்கின்றனர். முந்தைய ட்ரைலரில் பிராபசும் பிரித்விராஜும் சிறுவயதில் நெருங்கிய நண்பராக இருந்த பொழுது சில காரணங்களால் இருவரும் பிரிகின்றனர். பின்பு பிரித்விராஜ் உயிருக்கு ஆபத்து வரும் சூழல் வரத்  தனது நண்பனை உதவிக்கு அழைத்து அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக படம் அமைந்துள்ளதாக யூகிக்க முடிந்தது. ஆனால் இந்த புதிய ட்ரைலரில் முதல் ட்ரைலரை போலவே ஆரம்பித்தது. ஆனால் இறுதியில் இரு நண்பர்களும் பரம விரோதியாக மாறுவதாக சொல்கின்றனர். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.