Ryan Gosling talk about dhanush

Advertisment

'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ரயன் காஸ்லிங் நடிகர் தனுஷை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய ரயன் காஸ்லிங், தனுஷ் ஒரு சிறந்த நடிகர். தி கிரே மேன் படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கிய போது தனுஷ் எந்த விதமான தவறும் செய்யவில்லை. எத்தனை முறை டேக் எடுத்தாலும் தனுஷ் மட்டும் தவறுகள் ஏதும் செய்யாமல் சரியாக செய்தார். தனுஷை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவரை எதிரியாக நினைத்து நடிப்பது கடினமாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.