Advertisment

பிரபல இளம் நடிகர் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி!!!

avinash tiwary

நெட்பிளிக்ஸில் அண்மையில் வெளியாகி, அனைவரையும் கவர்ந்த படம் 'புல்புல்'. இப்படத்தில் அவினாஷ் திவாரி என்பவர் நடித்திருந்தார். இவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டதால் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Advertisment

இதனை தொடர்ந்து அவர் இறக்கவில்லை, அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவிக்கையில், “அவ்வளவுசீக்கிரம் சென்றுவிட மாட்டேன் நண்பர்களே. இதுபோன்ற வதந்திகளை பரப்புவதில் என்ன சந்தோஷம். ப்ளீஸ் இவ்வாறு செய்யாதீர்கள்,நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணித்துவிட்டதாக செய்திகள் வெளியாக, அந்த செய்தி பொய்யானவை என அவர் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bollywood netflix
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe