spb

பிரபல பாடகர் எஸ்.பி.பி. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள்.

Advertisment

இதனிடையே தினசரி எஸ்.பி.பி. உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று எஸ்.பி.சரண் தரப்பிலிருந்து வெளியானதாக பரவிய தகவலின்படி,எஸ்.பி.பிக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும்,அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவல் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவத்தொடங்கியது. இந்நிலையில் இது வதந்தி என்று எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

Advertisment