Skip to main content

மக்களுக்காக வீட்டில் யாகம் நடத்திய ரோஜா!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. 
 

roja

 

 

இந்தியாவிலும் கரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று இரவு 12 மணியிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவையே கடைபிடிக்கின்றது.

மக்கள் அனைவரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசாங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதை மீறி தேவையின்றி வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம் எல் ஏவும், நடிகையுமான ரோஜா கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, கரோனா பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் கடவுளை வேண்டி ருத்ராபிஷேகம் என்னும் யாகத்தைத் தனது வீட்டில் கணவர் செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் நடத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்