/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_25.jpg)
மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும், ஒரு சாரார் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இந்த நிலையில், ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளை அமெரிக்காவில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)