Advertisment

வெளியானது மோகன் ஜி-யின் 'ருத்ரதாண்டவம்'  ட்ரைலர்!

Rudra Thandavam

Advertisment

ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'திரௌபதி' திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, 'திரௌபதி' கூட்டணி ருத்ரதாண்டவம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் தர்ஷா குப்தா நடிக்கிறார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ருத்ரதாண்டவம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. U / A சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ட்ரைலரில் இடம்பெற்றுள்ள 'அவன் தர்மபுரிக்காரன், என் வேலைய மட்டும்தானடா நான் பாத்துக்கிட்டிருந்தேன்... என்னைய போய் சாதி வெறியன்னு ஊரெல்லாம் பேச வச்சு... எதுக்குடா இந்த கேவலமான அரசியல்...' ஆகிய வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisment

mohan g
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe