பைவ் ஸ்டார் கதிரேசன் எனத்திரைத்துறை வட்டாரத்தில் அறியப்படும் பிரபல தயாரிப்பாளர் கதிரேசன், ருத்ரன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ருத்ரன் திரைப்படம் வெளியாகவுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகமும் அதே தினத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
In theaters from 14th April 2022 ?#RudhranfromApr14pic.twitter.com/E9UeRNXyjl
— Raghava Lawrence (@offl_Lawrence) August 26, 2021