lawrence

பிரபல தயாரிப்பாளர் கதிரேசன், 'ருத்ரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Advertisment

சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்ட பலரும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், ருத்ரன் படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பில் பல முக்கியக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்கான பணிகளிலும் கவனம் செலுத்திவருகிறது.