ரூ. 2.15 கோடி விலையுள்ள காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ...

கடந்த நவம்பர் 28ஆம் தேதி வாகன சோதனையில் குஜராத் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த உயர்ரக போர்ஷே 911 காரை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டுள்ளனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்தவரிடம் ஆவணங்களை காட்டும்படி சொல்லியுள்ளனர். ஆனால், ஓட்டி வந்தவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

porsche

இதன் காரணமாக சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே போலீஸார் அந்த காரின் உரிமையாளரான ரஞ்சித் தேசாய் என்பவருக்கு ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதை குஜராத் போலீஸார் புகைப்படம் எடுத்து, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த காரின் உரிமையாளரின் பழைய ஆவணங்கள் சரியாக இல்லாத காரணத்தால் ஆர் டி ஓ அந்த உரிமையாளருக்கு 27 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக குஜராத் போலீஸார் ட்விட்டரில் நேற்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பதிவில் அபராதம் விதித்த ரசிதையும் பதிவிட்டு, இந்தியாவின் மிகப்பெரிய அபராத தொகை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

போர்ஷே 911 ரக ஸ்போர்ட் காரை ஜெர்மனியில் தயாரிக்கின்றனர். இதன் விலை சுமார் 2.15 கோடி இருக்கும்.

Gujarat porsche
இதையும் படியுங்கள்
Subscribe