style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாகுபலி படம் மூலம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது. ஹைதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற இடத்தில் ஆரம்பித்துள்ள இப்படப்பிடிப்பில் நாயகர்கள் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் மோதும் சண்டைக் காட்சிகள் இன்று படமாக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி படப்பிடிப்பு தளத்தில் ஆக்சன் சொல்லும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாகிறது. படத்தின் நாயகிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ACTION!!
The first shot of the MASSIVE MULTISTARRER has been DONE. #RRRShootBegins@tarak9999#RamCharan@ssrajamouli@srinivas_mohan@DOPSenthilKumar@DVVMoviespic.twitter.com/eUkWYuFRZF— RRR Movie (@RRRMovie) November 19, 2018