Advertisment

கரோனாவைக் கண்டுகொள்ளாமல் அப்டேட் விட்ட  ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு...

பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமௌலி இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 300 கோடி செலவில் உருவாகும் இந்தப் பிரம்மாண்ட படத்தின் கதைக் களம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தது என்று படக்குழு அறிவித்தது.

Advertisment

rrr

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சுமார் 350 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பணிகள் விரைவில் முடிவதாக இல்லை என்பதால் அடுத்த வருட சங்கராந்தியை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.

Advertisment

தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு படத்தின் டிசைன் லோகோவுடன் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்யப்போவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. உலகமே கரோனா அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் நிலையில் தற்போது ஆர் ஆர் ஆர் டீம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு வரவேற்பு நன்றாகவே கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

RRR
இதையும் படியுங்கள்
Subscribe